செய்திகள் மலேசியா
17ஆவது மாநில தேர்தலுக்கு வழிவிட்டு சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது: ஹாஜிஜி நூர் அறிவிப்பு
கோத்தா கினபாலு:
சபா மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைப்படுவதாக முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் அறிவித்தார்.
இது வரும் 17ஆவது சபா மாநிலத் தேர்தலுக்கு வழி வகுத்தது.
இன்று பிற்பகல் 2.54 மணிக்கு மாநில நிர்வாக மையமான மெனாரா கினாபாலுவில் சபா அரசாங்கப் பிரதிநிதிகளுடனான முதலமைச்சர் சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் ஹாஜிஜி இந்த கலைப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
சபா மாநில முதல்வர் துன் மூசா அமானின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.
சபா மாநில சட்டமன்றத்தில் 79 இடங்கள் உள்ளன. அவற்றில் 73 இடங்கள் போட்டியிடுகின்றன.
மற்ற ஆறு இடங்கள் நியமிக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களாகும்.
மேலும் சட்டமன்றம் கலைக்கப்பட்டதால் அடுத்த 60 நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
