செய்திகள் மலேசியா
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி மக்களின் மனதில் முஹம்மத் ஹசான் நிலைத்து நிற்கிறார்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
ரந்தாவ்:
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி மக்களின் மனதில் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் நிலைத்து நிற்கிறார்.
இதை யாராலும் மாற்ற முடியாது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவன் டத்தோஸ்ரீ ஆஎஸ் தனேந்திரன் கூறினார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் ரந்தாவ் தொகுதியில் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் போட்டியிடுகிறார்.
இத்தொகுதி டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசானுக்கு புதிய தொகுதி அல்ல. பல தவனைகளாக இங்கு தான் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று வருகிறார்.
டத்தோஸ்ரீ ஹசானின் இந்த வெற்றிக்கான காரணம் ரந்தாவ் மக்கள் தான் முக்கிய காரணம் தான்.
மேலும் ரந்தாவ் மக்களையும் டத்தோஸ்ரீ ஹசானையும் பிரிக்க முடியாது.
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி மக்களின் மனதில் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் நிலைத்து நிற்கிறார்.
காரணம் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெளியுறவு அமைச்சராகவும் உள்ளார்.
இருந்தாலும் அவர் தொகுதி மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கி வருகிறார். என்ன பிரச்சினை வேலையாக இருந்தாலும் தொகுதி மக்கள் தான் அவருக்கு முக்கியம்.
இதனால் தான் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.
ஆக வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.
குறிப்பாக ரந்தாவ் தொகுதி இந்திய மக்கள் தொடர்ந்து அவரை ஆதரிக்க வேண்டும்.
ரந்தாவ் தொகுதி இந்திய மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய டத்தோஸ்ரீ தனேந்திரன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 7:03 pm
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே: டத்தோ ஸ்ரீ சரவணன்
July 26, 2026, 2:40 pm
