நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிட்னியின் பரபரப்பான சாலையில் துப்பாக்கி சூடு; 20 பேர் காயம்: ஒருவர் படுகாயமடைந்தனர்

சிட்னி:

சிட்னியின் பரபரப்பான சாலையில் துப்பாக்கி சூடு சம்ப 20 பேர் காயமடைந்த வேளையில் ஒருவர் படுகாயமடைந்தனர்.

சிட்னியில் பரபரப்பான சாலையில் நூறுக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் வரை சுட்டு இருபது பேர் காயமடைந்ததாகக் கூறப்படும் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பயங்கரவாதம் அல்லது கும்பல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இல்லை என்று சிட்னி போலிசார் நிராகரித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நகரின் இன்னர் வெஸ்டில் உள்ள ஒரு சாலையில் இச்சம்பவம் குறித்து போலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அங்கு துப்பாக்கி ஏந்திய ஆடவர் கடந்து செல்லும் கார்கள்,  மீது சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

50 முதல் 100 வரையிலான இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீஸ் படை அந்தப் பகுதியை முற்றுகையிட்டு ஒரு வணிகத் தளத்தின் மேலே உள்ள ஒரு பிரிவுக்குள் நுழைந்து 60 வயதுடைய ஒருவரைக் கைது செய்தது.

மேலும் சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகளை அவர்கள் கைப்பற்றினர்.

இந்த சம்பத்தில் 20 பேர் காயமடைந்த வேளையில்  ஒருவர் படுகாயமடைந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் போலிஸ்படையின் தற்காலிக கண்காணிப்பாளர் ஸ்டீபன் பாரி இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset