
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முஹம்மதுக்கு முயிஸ் (MUIS) விருது: சிங்கப்பூர் அதிபர் தர்மன் வழங்கினார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்துக்குப் பங்காற்றிய 9 பேருக்கு முயிஸ் (MUIS) விருது வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முஹம்மது ஒருவர்.
உள்ளூர் முஸ்லிம் சமூகத்தில் வழங்கப்படும் ஆக உயரிய கௌரவமாகக் கருதப்படும் முயிஸ் விருதை அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கினார்.
Anugerah Jasa Bakti எனும் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அதாவது, சேவை விருதை வென்ற ராஜா முஹம்மது உள்ளூர் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இளம் தலைவர்களை வளர்க்கவும் சமயக் கல்வி முறையை மேம்படுத்தவும் பாடுபட்டுள்ளார்.
"சமூகச் சேவை என்பது என் வாழ்வின் அர்த்தத்தை ஆழமாக உணரவைக்கும் பயணமாக இருக்கிறது. நம்மால் முடிந்த சிறிய செயலும் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது என்னுடைய நம்பிக்கை," என்றார் ராஜா முஹம்மது.
அவர் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றைப் பாதுகாப்பதிலும் பங்காற்றியுள்ளார்.
2015இல் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகம் பற்றிய முதல் ஆவணப்படத்தின் தயாரிப்பைத் ராஜா முஹம்மது வழிநடத்தினார்.
அவர் தற்போது உள்ளூர் இந்திய,தமிழ் முஸ்லிம்கள் பற்றிய தகவல் தளமொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Islamic Religious Council of Singapore (Muis)
தலைசிறந்த சேவையாற்றியவர்களையும் (Anugerah Jasa Cemerlang) இளம் தலைவர்களையும் (Anugerah Belia Harapan) அங்கீகரிக்கும் விருதுகளும் (4 அக்டோபர்) இஸ்தானாவில் வழங்கப்பட்டன.
காலித் பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற ஹாஜி அலாவுதீனுக்கு (Haji Alla’udin) Anugerah Jasa Sejati எனும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.
ஆதாரம்: Mediacorp
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm