நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

 ஜப்பானில் முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமராகிறார்  

டோக்கியோ:

ஜப்பானை ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party) தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் சானே தகாய்ச்சி (Sanae Takaichi) தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அப்பதவிக்கு அவரும் வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமியும் (Shinjiro Koizumi) போட்டியிட்டனர்.

கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்களிப்பில் தகாய்ச்சிக்கு 185 வாக்குகளும் கொய்சுமிக்கு 156 வாக்குகளும் கிடைத்தன.

வெற்றி பெற்ற 64 வயது தகாய்ச்சி ஜப்பானின் அடுத்த பிரதமராவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகாய்ச்சி பிரதமரானால் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை அவரைச் சேரும்.

மிதவாத ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அண்மை தேர்தல்களில் நாடாளுமன்றத்தின் கீழவையிலும் மேலவையிலும் பெரும்பான்மையை இழந்தது.

அதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்சியால் ஆட்சிக்கு வரமுடியும்.

யார் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்ய இம்மாதம் 15ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு நடத்தப்படும்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset