நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹமாஸ் அமைதிக்கு தயார்; காசா மீது குண்டுவீச்சு நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: டிரம்ப்

வாஷிங்டன்:

ஹமாஸ் அமைதிக்கு தயாராக இருப்பதால் காசா மீது குண்டுவீச்சு நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை கூறினார்.

காஸாவில் அமைதிக்காக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் காலக்கெடுவை அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

ஹமாஸின் கருத்தை வரவேற்றுள்ள டிரம்ப், நீடித்த அமைதிக்கு ஹமாஸ் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் பதிவில், 

தற்போது ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி அவர்கள் நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நம்புகிறேன். 

காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் நாம் பணயக் கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியே அழைத்து வர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றியான விவாதங்களில் நாங்கள் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறோம். 

இது காஸா பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்ட காலமாக தேவையான அமைதி பற்றியது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset