நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன இளம் பெண் ஷாமினியை கண்டுபிடிக்க போலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது

காஜாங்:

காணாமல் போன இளம் பெண் சா
ஷாமினியை கண்டுபிடிக்க போலிஸ் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் ஏஎஸ்பி நஸ்ரோன் அப்துல் யூசோப் இதனை கூறினார்.

16 வயதுடைய எஸ். ஷாமினி  நேற்று மாலை முதல் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.

அவர் கடைசியாக பண்டார் ரிஞ்சிங்கில் உள்ள அவரது வீட்டில் காணப்பட்டது.

அவர் காணாமல் போனது குறித்த புகார் நேற்று மாலை 4 மணிக்குப் பெறப்பட்டது.

ஷாமினி மெல்லிய உடலமைப்பு கொண்டவர். 140 செ.மீ உயரம் கொண்டவர்.

அவரது கடைசி ஆடை வெள்ளை டி-சர்ட்,  கருப்பு கால்சட்டை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஷாமினி பற்றி ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அல்லது காஜாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தை  03-89114222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset