நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா பணியில் உள்ள மலேசிய தன்னார்வலர்களை விடுவிக்க அரசு முழு முயற்சிகளையும் எடுத்துள்ளது: பிரதமர்

சிப்பாங்:

காசா பணியில் உள்ள மலேசிய தன்னார்வலர்களை விடுவிக்க அரசு முழு முயற்சிகளையும் எடுத்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அனைத்து மலேசிய ஆர்வலர்கள், தன்னார்வலர்களின் உடனடி விடுதலையை உறுதி செய்யப்பட வேண்டும்.

இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நான் உறுதியளிக்கிறேன்.

மலேசிய ஆர்வலர்கள், தன்னார்வலர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளைப் பெற்றேன்.

இன்று காலை சுமுத் நுசாந்தரா கட்டளை மையத்தின் இயக்குநர் ஜெனரல் டத்தோ சானி அராபியுடன் பேசினேன்.

சுமுத் நூசாந்தரா மனிதாபிமான மிஷனின் புரவலர் என்ற முறையில், மலேசிய பிரதிநிதிகளின் குடும்பங்களுக்கும் எனது ஸலாமினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அவர்களின் உடல்நலம், நலன் எல்லா நேரங்களிலும் முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset