நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் மோதிக்கொண்ட விமானங்கள்

நியூயார்க்:

அமெரிக்காவில் டெல்ட்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines) நிறுவனத்தின் 2 உள்நாட்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

சம்பவம் நேற்றிரவு நியூயார்க் (New York) நகரின் லகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் நடந்தது.

வட கரோலைனாவிலிருந்து (North Carolina) வந்த விமானம் ஒன்று தரையிறங்கிக்கொண்டிருந்தது. அதில் 57 பயணிகள் இருந்தனர்.

அப்போது அதன் வலதுபுற இறக்கைப் பகுதி வெர்ஜீனியா (Virginia) மாநிலத்துக்குப் புறப்படவிருந்த மற்றுமொரு விமானத்தின் முன்பகுதி மீதும் முன்புறச் சன்னல்கள் மீதும் மோதியது.

சேதமடைந்த விமானத்தில் 28 பயணிகள் இருந்தனர்.

வட கரோலைனாவிலிருந்து வந்த விமானத்தின் சிப்பந்தி ஒருவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் டெல்ட்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அவர்கள் விடுதியில் தங்க ஏற்பாடு செய்ததாகவும் உணவு வழங்கியதாகவும் அது தெரிவித்தது.

விசாரணை தொடர்வதாக நிறுவனம் குறிப்பிட்டது.

ஆதாரம்: CNN

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset