நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் தகுதியின் அடிப்படையில் மலேசியாவிற்கு வருகை புரிய டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஆசியான் தகுதியின் அடிப்படையில் மலேசியாவிற்கு வருகை புரிய டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பு மலேசியாவின் தகுதிக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியான் சார்பாகவும் செய்யப்பட்டது.

ஆசியானுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை மலேசியா தற்போது வகித்து வருகிறது.

இதனால் வட்டார நாடுகள் தலைவரை அழைப்பதற்கான ஒரு ஆணையாக மலேசியா மாறியுள்ளது.

ஆக இந்த அழைப்பு மலேசியாவின் திறனைப் பொறுத்தது மட்டுமல்ல, ஆசியானை நிர்வகிக்கும் மலேசியாவின் பொறுப்பாகும்

எனவே இந்த அழைப்பு ஆசியான் நாடுகளின் சார்பாக அமைந்துள்ளது.

அனைத்து ஆசியான் நாடுகளும் அதிபர் டொனால்ட் டிரம்புடன் மட்டுமல்லாமல், அழைக்கப்பட்ட பல உலகத் தலைவர்களுடனும் தொடர்பு கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset