நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 பேர் கொண்ட குடும்பம் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கோத்தா கினபாலு:

ஏழு பேர் கொண்ட குடும்பத்தினர் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கொலம்போங்கில் உள்ள கம்போங் செண்டரகாசி அருகே இன்று காலை  நிலச்சரிவு ஏற்பட்டது.
 
ஒன்பது பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாக நம்பப்படும் குடிசை வீடு புதைந்ததில் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் அப்பகுதியில் உள்ள மலைப்பாங்கான மண் அமைப்பு நிலையற்றதாக மாறியதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset