நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.5 மில்லியன் ஊழல் பணத்தை தாபோங் ஹாஜி, ஏஎஸ்பியில் வைத்திருந்த குடிநுழைவுத் துறை அதிகாரி

கோலாலம்பூர்:

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஊழல் பணத்தை தாபோங் ஹாஜி, ஏஎஸ்பியில் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் வைத்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் நடத்திய சோதனையில் இது அம்பலமானது.

தனது ஊழலை மறைக்க குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் தாபோங் ஹாஜி, அமானா சஹாம் பூமிபுத்ரா கணக்குகளில் இந்த சட்டவிரோதப் பணத்தை பதுக்கி வைத்திருந்தார்.

சந்தேக நபர், அவரது மனைவி, அவரது மகன் ஆகியோரின் பெயர்களில் தாபோங் ஹாஜி கணக்குகளில் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஏஎஸ்பி கணக்கில் 400,000க்கும் அதிகமான பணம் சேமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கூடுதலாக சந்தேக நபரிடமிருந்து 60,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், 13,900 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

எம்ஏசிசி இன்று வெளியிட்ட அறிக்கையில்  இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset