நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா மடானி என்ற முழக்கம் மக்களை ஏமாற்றுவதாகும்: ஹாடி

அலோர்ஸ்டார்:

மலேசியா மடானி என்ற முழக்கம் மக்களை ஏமாற்றுவதாகும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் சாடினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தால் மலேசியா மடானி என்ற முழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முழக்கம்  மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கெடாவின் அலோர்ஸ்டார் நகரில் நடைபெற்ற 71ஆவது பாஸ் மாநாட்டில் தனது கொள்கை உரையில் ஹாடி,

இந்த மாநாட்டின் கருப்பொருளான இஸ்லாமிய தீர்வுகளுக்குத் திரும்புவது என்பதை அறிவித்தார்.

அதே நேரத்தில் மடானி என்ற கருத்தை விமர்சித்தார்.

மடானி என்ற கருத்து ஹத்ததா' (சீர்திருத்த) இயக்கத்தை ஒத்திருப்பதாக ஹாடி விவரித்தார்.

இது சீர்திருத்தம், முற்போக்கானது, பழமைவாதமானது, தாராளவாத இஸ்லாம் மற்றும் மதச்சார்பற்ற இஸ்லாம் போன்ற மேற்கத்திய சொற்கள் என்றும் அவை நம்பிக்கையை சிதைக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset