நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் வலுவிற்கும் மேம்பாட்டிற்கும் மகளிர்களின் பங்களிப்பு அளப்பரியது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

அலோர்ஸ்டார்:

மஇகாவின் வலுவிற்கும் மேம்பாட்டிற்கும் அதன் மகளிர்களின் பங்களிப்பு அளப்பரியது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.

பினாங்கு, பெர்லிஸ், கெடா மாநிலங்களைச் சேர்ந்த மஇகா மகளிர் பிரிவின் முன்னாள் சேவையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் மாபெரும் விழா நேற்று பினாங்கில் நடைபெற்றது.

இதே போன்ற விழாக்கள் நாடு முழுவதும் மஇகா மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இம்முயற்சி பாராட்டுக்குரியது.

மஇகாவின் வளர்ச்சிக்கு அதன் மகளிர் பிரிவின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கட்சிக்கு இம்மகளிர்கள் விசுவாசமாக இருந்துள்ளனர்.

குறிப்பாக கட்சிக்காக அவர்கள் போராடி உள்ளனர்.

இதுபோன்ற மகளிர்களை ஒன்றிணைந்து அங்கீகரிப்பது பாராட்டக் கூடிய விஷயமாகும்.

இவ்விழாவில் தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

வரும் கால அரசியல் சவால்களை எதிர்கொள்ள மஇகா மகளிர் பிரிவு தயாராக இருக்க வேண்டும்.

குறிப்பாக கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்கள் எடுக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset