நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரபு - இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் பிரதமர் தேசிய உரையை வழங்கவுள்ளார்

தோஹா:

அரபு - இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய உரையை வழங்கவுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரபு, இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்டார் சென்றுள்ளார்.

அவர் இன்று இரவு உச்சநிலை மாநாட்டில்  தேசிய உரையை வழங்கவுள்ளார்.

ஹமாஸ் தலைமையை குறிவைத்து தோஹாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்தும், 

காசாவில் நடந்து வரும் மனிதாபிமான துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலும் அவரின் தேசிய உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 11 மணிக்கு) டத்தோஸ்ரீ அன்வார் உச்சி நிலை மாநாட்டில் உரையாற்றுவார்.

கத்தாருடன் மலேசியாவின் அசைக்க முடியாத ஒற்றுமையையும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், இஸ்ரேலிய அட்டூழியங்களைக் கண்டிப்பதிலும் அதன் உறுதியான உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset