நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியின் 11ஆவது பிரதமர் வேட்பாளர் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டான்ஸ்ரீ மொஹைதின்

அலோர்ஸ்டார்:

தேசியக் கூட்டணியின் 11ஆவது பிரதமர் வேட்பாளர் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்.

இக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

தேசியக் கூட்டணியிம்  உச்ச மன்றக் கூட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில் அடுத்த வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி விவாதிக்கும். 

மேலும், கட்சி கூட்டணிக்கு பாஸ் தலைமை தாங்க வேண்டும் என்ற முன்மொழிவும் இதில் அடங்கும்.

கூட்டணியில் மிகப்பெரிய அங்கமான பாஸ் 11ஆவது பிரதமராக இருக்க பொருத்தமானதாகக் கருதும் பெயரை பரிந்துரைக்கும் உரிமையைக் கொண்டுள்ளது.

இந்த விஷயம் தேசியக் கூட்டணி தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் யாரையும் பரிந்துரைக்க பாஸ் கட்சிக்கு உரிமை உள்ளது.

கடந்த பொதுச் பேரவையில் பெர்சத்து அவ்வாறு செய்தபோது,   இந்த பாஸ் பேரவையில் அவர்கள் அந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்.

முக்கியமானது என்னவென்றால், இந்த விஷயத்தை முடிவு செய்வதற்கு முன், அடுத்த வாரம் தேசியக் கூடணி உச்ச மன்ற கூட்டத்தை கூட்டி இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்போம்.

பாஸ் பேரவை தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset