நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக ஹாடி கோடிக் காட்டினார்

அலோர்ஸ்டார்:

பாஸ் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கோடிக் காட்டினார்.

இஸ்லாமியக் கட்சி பாஸ் தேசியக் கூட்டணியின் வாயிலாக நாட்டை வழிநடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை வழிநடத்த கட்சி தயாராக உள்ளது.

நாட்டின் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் தான் சிறந்ததொரு தீர்வாகும்.

கெடாவில் உள்ள 71ஆவது பாஸ் மாநாட்டில் தனது கொள்கை உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

மலேசியாவை ஒரு பன்மைத்துவ சமூகமாக வழிநடத்த பாஸ் தயாராக உள்ளது.

மற்ற இனங்களின் உரிமைகள், நலன்களை ஓரங்கட்டாமல் இஸ்லாத்தின் உண்மையான விளக்கத்துடன் (அல்-தின்) கூட்டரசு அரசியலமைப்பின் உன்னதத்தை கடைபிடிக்கிறது.

ஒரு சரியான, நீதியான மற்றும் இரக்கமுள்ள இஸ்லாம் மட்டுமே பன்மைத்துவ சமூகத்தை இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் ஒன்றிணைக்க முடியும் என்பதை நம்புங்கள்.

அலோர் ஸ்டாரில் உள்ள கெடா பாஸ் வளாகத்தில் பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் முன்னிலையில் அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset