நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஃபஹ்மி

ஜார்ஜ்டவுன்:

அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.

பொறுப்பற்ற தரப்பினரால் 'ஃபிஷிங்' தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிப்பாக இணைப்புகள் அல்லது கியூஆர் குறியீடுகளைக் கொண்ட மின்னஞ்சல்களை உள்ளடக்கிய எச்சரிக்கை அறிவிப்பு மக்களவை செயலாளர் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இணைப்பைக் கிளிக் செய்தால் பெறுநரின் சாதனத்தை ஹேக் செய்யக்கூடிய தீம்பொருள் கூறுகள் மின்னஞ்சலில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

இது இயற்கையில் 'ஃபிஷிங்' ஆகவும் இருக்கலாம், அதாவது தனிப்பட்ட மற்றும் பாதுகாப்புத் தகவல்கள் சமரசம் செய்யப்படலாம்.

ஆக இது குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset