நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழைய குருடி கதவைத் திருடி என்பது போல் மஇகா இனி செயல்பட முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பட்டர்வொர்த்:

பழைய குருடி கதவைத் திருடி என்பது போல் மஇகா இனி தொடர்ந்து செயல்பட முடியாது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

மஇகா என்பது ஒரு பொது கட்சியாகும். இது யாருக்கும் சொந்தமான நிருவனம் அல்ல.

நான் உட்பட யாரும் சம்பளம் வாங்கி கொண்டு இங்கு வேலை செய்யவில்லை.

எங்களின் முன்னோடி துன் சாமிவேலு காட்டிய வழியில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

அவரும் சம்பளம் எடுக்கவில்லை. எங்களுக்கும் அந்த நோக்கம் இல்லை.

ஆக இந்திய சமுதாயத்தின் நலன், அவர்களின் உரிமையை காக்கும் நோக்கில் இக்கட்சி தொடர்ந்து செயல்படும்.

குறிப்பாக நாட்டில் நிலவி வரும் அரசியல் சூல்நிலை குறித்து அனைவருக்கும் தெரியும்.

இந்த அரசியலில் பழைய குருடி கதவைத் திருடி என்பது போல் மஇகா இனி செயல்பட முடியாது.

அதற்காக மஇகா வேறு கூட்டணிக்கு மாறி போகவுள்ளது என்று நான் சொல்லவில்லை.

ஆனால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது.

இந்த முடிவு கட்சியின் நலனை தாண்டி சமுதாயத்தின் நலனை அடிப்படையாக கொண்டு தான் இருக்கும் என்று அவர் கூறினார்.

எதிர்கட்சியாக இருந்த போது பேசிய பல பேர் இன்று அமைதியாகி விட்டனர். அவர்களின் சூழ்நிலை அப்படி. அவர்களை குறை சொல்லவும் முடியாது.

அதே வேளையில் எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு இறந்து விட்டார் என நான் அன்றே சொன்னேன்.

ஆனால் இந்திய சமுகம் அதை நம்பவில்லை.  இனியாவது சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பினாங்கு, பெர்லிஸ், கெடா மாநிலங்களைச் சேர்ந்த மஇகா மகளிர் பிரிவின் முன்னாள் சேவையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் மாபெரும் விழா நேற்று பினாங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset