நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 கார்கள், 2 சுற்றுலா பேருந்துகள் உட்படுத்திய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்

கோலாலம்பூர்:

நான்கு கார்கள்,  இரண்டு சுற்றுலா பேருந்துகள் உட்படுத்திய விபத்தில் மொத்தம் 5 பேர் காயமடைந்தனர்.

கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுத் அதிகாரி சே முகமட் சலாஹுடின் இதனை தெரிவித்தார்.

இந்த விபத்து இங்குள்ள ஜாலான் இம்பியில் உள்ள ஜாலான் ஹாங் துவா பகுதியில் நேற்று இரவு  நிகழ்ந்தது.

இதில் நான்கு கார்களும் இரண்டு சுற்றுலா பேருந்துகளும் மோதி விபத்தில் சிக்கின.

தீயணைப்புப் படையின் செயல்பாட்டு மையத்திற்கு இரவு 10.49 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

இரவு 10.57 மணிக்கு தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு வந்தபோது,   

அங்கு டொயோட்டா வியோஸ், நிசான் அல்மேரா, ஹூண்டாய் ஸ்டாரியா,  ஹோண்டா சிட்டி ஆகிய நான்கு வாகனங்கள் இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் இரண்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, ஆரம்ப சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset