நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத்தில் புகைபிடிக்கக் கூடாது என கூறியதால் கோபமடைந்த ஆடவர் தம்பதியினருடன் சண்டையிட்டார்

ஷாஆலாம்:

உணவகத்தில் புகைபிடிக்கக் கூடாது என கூறியதால் கோபமடைந்த ஆடவர் தம்பதியினருடன் சண்டையிட்டுள்ளார்.

ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த சம்பவம் இங்குள்ள செக்சன் 13இல் உள்ள ஒரு உணவகத்தில் நிகழ்ந்தது.

புகைபிடித்ததற்காக கண்டிக்கப்பட்ட பின்னர் ஒரு நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு சண்டையைத் தொடங்கியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

அப்போது சம்பந்தப்பட்ட நபர் ஒரு உணவக ஊழியர், அந்த இடத்தில் இருந்த ஒரு தம்பதியினரால் கண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்ததாக நம்பப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலிசாருக்கு ஒரு புகார் கிடைத்தது.

மேலும் அது தொடர்பான வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் மறுநாள் மதியம் 1.45 மணிக்குப் பரவியது.

இச்சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset