நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மருத்துவ மன்றத்தின் புதிய தலைவராக டாக்டர் திருநாவுக்கரசு நியமனம்

கோலாலம்பூர்:

மலேசிய மருத்துவ மன்றத்தின் புதிய தலைவராக டாக்டர் திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய மருத்துவ மன்றத்தின் முன்னாள் கௌரவ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஆர். திருநாவுக்கரசு ஆவார்.

இவர் தற்போது டத்தோ டாக்டர் கல்விந்தர் சிங் கைராவுக்குப் பதிலாக அம்மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் டாக்டர் திருநாவுக்கரசு, தலைவராக தனது மூன்று முக்கிய உறுதி மொழிகளை அறிவித்தார்.

அதாவது தலைமைப் பாத்திரங்களில் மருத்துவர்களை மேம்படுத்துதல், நியாயமான கொள்கைகளை ஆதரிப்பது, தொழில்முறை சுயாட்சியை மீட்டெடுப்பது ஆகியவை அந்த 3 உறுதி மொழியாகும்.

மேலும் மருத்துவர்களின் அதிகப்படியான பணிச்சுமை, ஆன்-கால் அலவன்ஸ் அவசரமாக மறுஆய்வு செய்வது உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுகாதார அமைச்சு ஆராய வேண்டும்.

குறிப்பாக தனியார் மருத்துவ பயிற்சியாளர் கட்டணங்கள் முதல் ஒப்பந்த பதவிகள் வரை, மூன்றாம் தரப்பு நிர்வாகி  நடைமுறைகள் முதல் மருத்துவ சட்ட சீர்திருத்தம் வரை, நீதி, நிலைத்தன்மையைக் கொண்டு வரும் மாற்றங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset