நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரி வழக்கு; சொத்து பறிமுதல், குற்றவியல் குற்றச்சாட்டுகள் இரண்டும் வெவ்வேறு அம்சங்களாகும்: ஏஜிசி

கோலாலம்பூர்:

இஸ்மாயில் சப்ரி வழக்கில் சொத்து பறிமுதல், குற்றவியல் குற்றச்சாட்டுகள் இரண்டும் வெவ்வேறு அம்சங்களாகும்.

சட்டத்துறை தலைவர்  அலுவலகம் ஏஜிசி இதனை ஓர் அறிக்கையில் கூறியது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவரது முன்னாள் அரசியல் செயலாளர் அனுவார் முகமது யூனுஸ் ஆகியோருடன் தொடர்புடைய பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பான வழக்கு தொடர்பான எம்ஏசிசி விசாரணையின் முழு அறிக்கை கிடைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி எம்ஏசிசியால் கைப்பற்றப்பட்ட 170 மில்லியன் ரிங்கிட் தொடர்பான அறிக்கை செப்டம்பர் 12ஆம் தேதி பெறப்பட்டது.

நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிகளின்படி, வழக்குத் தொடராமல் மலேசிய அரசாங்கத்திடம் பணத்தை பறிமுதல் செய்வது எம்ஏசிசியால் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பறிமுதல் நடவடிக்கைகளும் குற்றவியல் வழக்குத் தொடுப்பு இரண்டு தனித்தனி செயல்முறைகளாகும்.

எம்ஏசிசியால் பறிமுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டாலும் இந்தத் துறை முழு விசாரணை அறிக்கையையும் முழுமையாக மதிப்பாய்வு செய்யும் என்று ஏஜிசி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset