நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணம் பறிக்கும் மின்னஞ்சல் தொடர்பான 4 புகார்களை போலிஸ் பெற்றுள்ளது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணம் பறிக்கும் மின்னஞ்சல் தொடர்பான 4  புகார்களை போலிஸ் பெற்றுள்ளது.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோ குமார் இதனை கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பான நான்கு புகார்கள் வந்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஆபாச வீடியோக்களை விநியோகிப்பதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், செனட்டர் நெல்சன் அங்காங், கூலிம் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியா ஜென், சுங்கைபட்டானி நாடாளுமன்ற உறுப்பினர் தௌஃபிக் ஜோஹாரி ஆகியோரிடமிருந்து போலிசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

வோங் சென் சம்பந்தப்பட்ட சம்பவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டல் விடுத்தவர் விரும்பியுள்ளார்.

தகவல்களைப் பெறவும் மின்னஞ்சலின் உரிமையாளரைக் கண்டறியவும் எம்சிஎம்சியுடன் போலிஸ் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset