நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்

ஈப்போ:

தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும். இதனால் எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எம்ஐபிபி எனப்படும் மலேசிய இந்திய  மக்கள் கட்சியின் தலைவர்  புனிதன் கூறினார்.

பேரா மாநில அளவிலான எம்ஐபிபி கட்சியின் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இச்சந்திப்பு கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராவது குறித்து பேசப்பட்டது.

காரணம் நாளை பொதுத் தேர்தல் நடைபெற்றாலும் அதில் தேசியக் கூட்டணி வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

ஆக அதற்கு எம்ஐபிபி கட்சி தயாராக இருக்க வேண்டும். கட்சி வலுவாக இருக்க வேண்டும்.

மேலும் வரும் தேர்தலில் கிட்டத்தட்ட 65 சதவீத வாக்குகள் தேசியக் கூட்டணிக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த வாக்குகளை மேலும் அதிகரிக்க எம்ஐபிபி தொடர்ந்து பாடுபடும் என்று புனிதன் கூறினார்.

மஇகா உட்பட பல அரசியல் கட்சிகள் தேசியக் கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எம்ஐபிபி கட்சிக்கு பாதிப்பு வருமான என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

இவ்விவகாரத்தில் நான் ஒன்றை மட்டுமே கூற விரும்புகிறேன். முதலில் மஇகா தேசியக் கூட்டணியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்யட்டும்.

அதன் பின் எம்ஐபிபி கட்சியின் நிலைபாடு குறித்து அறிவிக்கிறேன்.

மேலும் புதிய கட்சிகளால் எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி என்று புனிதன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset