நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடனான மஇகா, மசீச உறவு முறிந்ததால் தேசியக் கூட்டணி நாடாளுமன்றத்தில் 80 இடங்களை அடைய வாய்ப்புள்ளது: துவான் இப்ராஹிம்

சுங்கைப்பட்டாணி:

தேசிய முன்னணியுடனான மஇகா, மசீச உறவு முறிந்ததால் தேசியக் கூட்டணி நாடாளுமன்றத்தில் 80 இடங்களை அடைய வாய்ப்புள்ளது.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசிய முன்னணி மஇகா, மசீச இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் 80 நாடாளுமன்ற இடங்களை வெல்லும் இலக்கை அடைய தேசியக் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பைத் திறந்துள்ளது.

அதே நேரத்தில் 16ஆவது பொதுத் தேர்தலில் கெடா, பெர்லிஸ், திரெங்கானு, கிளந்தான் ஆகிய இடங்களில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்.

மேலும் பல மாநிலங்களிலும் தேசியக் கூட்டணி வெற்றி பெறும் திறன் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தற்போது இருப்பதாக அவர் கூறினார்.

அதைத் தவிர ஜசெகவுடன் அரசாங்கத்தில் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தபோது அம்னோ உறுப்பினர்களும் சங்கடமாக உள்ளது.

இதனால் ஆதரவு தேசியக் கூட்டணிக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset