நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபாச வீடியோ தொடர்பான மிரட்டல்களால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஆபாச வீடியோ தொடர்பான 
மிரட்டல்களால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

ஆபாச வீடியோ மிரட்டல்களைப் பெற்ற குறைந்தது ஒன்பது அரசியல்வாதிகளில் நானும் ஒருவராவார்.

ஒரு மதிப்பாய்வில் ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோன்ற அச்சுறுத்தும் உள்ளடக்கம், வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டும் உள்ளன.

இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது அவர் அவர்  கூறினார்.

அந்த மின்னஞ்சல் அரசியல்வாதியைப் பின்தொடர்ந்து வந்த ஒரு தனியார் புலனாய்வாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரால் அனுப்பப்பட்டது.

மின்னஞ்சலைப் பெற்றவர்கள் 100,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தாவிட்டால் வீடியோ வெளியிடப்படும் என மிரட்டப்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset