நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா கலந்து கொள்ளாததற்கு பயம் காரணம் அல்ல: அர்விந்த்

கோலாலம்பூர்:

பாஸ் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா கலந்து கொள்ளாததற்கு பயம் காரணமாக அல்ல.

மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நேரப் பிரச்சினை காரணமாக எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. பிரதிநிதிகளையும் அனுப்ப முடியவில்லை.

பாஸ் மாநாட்டிற்கான அழைப்பிதழ்  ஒரு நாள் முன்பு தான் எங்களுக்கு கிடைத்தது. இதை  நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இதன் விளைவாக தான் கட்சி பிரதிநிதியை அனுப்ப முடியாமல் போனது.

ஆகவே இம்மாநாட்டில் கலந்து கொள்ளாதற்கு பயம் அல்லது  தடுக்கப்பட்டது காரணம் அல்ல.

 மஇகா இளைஞர் தலைவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள் என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

எந்தவொரு அழைப்பையும் ஏற்றுக்கொள்ளும்போது மலேசியர்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பது வழக்கம்.

70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சியாக மஇகா, எதிர்க்கட்சிகளுக்குக் கூட ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset