நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலம்பம், கபடிப் போட்டிகள் சுக்மாவில் நிலை நிறுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கைப்பட்டாணி:

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடிப் போட்டிகள் சுக்மாவில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
 
மலேசிய சிலம்பக் கழகம், எம்ஐஇடி, மஇகா தேசிய விளையாட்டு பிரிவு இணைந்து தேசிய அளவிலான சிலம்பப் போட்டியை நடத்தியுள்ளன.

இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 30 பிரிவுகளில் 300 சிலம்பப் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இப்போட்டியை தொடக்கி வைத்து பேசிய அவர்,

இந்த வெறும் போட்டி மட்டுமல்ல. விளையாட்டு வீரர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தின் மதிப்பை உயர்த்துவதுடன் தேசிய அரங்கில் விளையாட்டு உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக 2026ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெறும் சுக்மா போட்டிக்கு போட்டியாளர்களை தயார்படுத்தம் களமாகவும் இப்போட்டி அமைந்துள்ளது.

இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறந்த செயல்திறனைக் காட்ட வாய்ப்பளிக்கிறது என்று அவர் கூறினார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பமும் கபடியும் ஒவ்வொரு முறையும் சும்காவில் இடம் பெறுவது பெரும் சர்ச்சையாக உள்ளது.

இவ்விரு விளையாட்டுகளிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் சுக்மா தான் மிகப் பெரிய கனவாக உள்ளது. ஆக பொறுப்பில் உள்ளவர் அவர்களின் கனவை கலைத்து விடக் கூடாது.

ஆக சிலம்பம், கபடிப் போட்டிகள்
சுக்மாவில் நிலை நிறுத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset