நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்

கோலாலம்பூர்:

பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை என்று அதன் இளைஞர் பிரிவு துணைத் தலைவர்  கேசவன்  கூறினார்.

பாஸ் கட்சியின் பேராளர் மாநாடு சுங்கைப்பட்டாணியில் நடைபெற்றது.

இதன் இளைஞர் பிரிவு மாநாட்டில் கலந்து கொள்வதை மஇகா புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

உண்மையில் இந்த மாநாட்டை மஇகா புறக்கணிக்கவில்லை.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள எனக்கும் இளைஞர் பிரிவு தலைவருக்கும் அழைப்பு வந்தது.

ஆனால் இம்மாநாட்டில் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலில் மாநாடு குறித்து அழைப்பு எங்களுக்கு தாமதமாக தான் வந்தது. இதனால் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டு விட்டது.

அதே வேளையில் பாஸ் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து கட்சி தலைமைத்துவத்திடம் அனுமதி கோருவதற்கு போதுமான கால அவகாசம் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இது தான் உண்மையான காரணமாகும்.

அதன் அடிப்படையில் பாஸ் மாநாட்டை மஇகா புறக்கணிக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கேசவன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset