நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்: ஜம்ரி

புத்ராஜெயா:

பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்.

உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.

பல்கலைக்கழகத்தில் இடம் பெறும் அனைத்து மாணவர்களும் முன்கூட்டியே பதிவு செய்து, நிதி சிக்கல்கள் அல்லது பிற தடைகளை எதிர்கொண்டால் உடனடியாக உயர்கல்வி அமைச்சுக்கு தெரிவிக்க வேண்டும்.

மலேசிய முதல் குடும்ப மாணவர் மேம்பாட்டுத் திட்டம், யாயாசன் பெர்காசா சிஸ்வா ஆரம்ப படிப்பு உதவி உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகளை அமைச்சு வழங்குகிறது.

தங்கள் படிப்பைத் தொடர இடம் பெற்ற அனைவருக்கும் எனது செய்தி, ஏதேனும் சிக்கல்கள் அல்லது நிதி நெருக்கடிகள் அல்லது ஏதேனும் தடைகள் இருந்தால், தயவுசெய்து என்னையும் கல்வியமைச்சை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

முதலில் பதிவு செய்யுங்கள்.

அனைத்து மாணவர்களும் பதிவு செய்வதற்கு உதவுமாறு அனைத்து துணை வேந்தர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset