நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலி வெள்ளம்; இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்: பிரதமர்

கோலாலம்பூர்:

பாலியில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரமான உயிரிழப்பு குறித்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். 

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், வீடுகள், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்தக் கடினமான நேரத்தை எதிர்கொள்ளும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, இந்தோனேசிய மக்களுடன் மலேசியா உறுதியாக நிற்கும். 

மலேசியா உங்களுடன் துக்கப்படுகிறது, 

மேலும் பாலி மக்கள் இந்த பேரழிவிலிருந்து மீண்டு வர நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset