நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொக்கியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மீனைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்: ரபிசி

கோலாலம்பூர்:

வறுமையை ஒழிக்க கொக்கியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மீனை அல்ல என்று முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார்.

வறுமை ஒழிப்புக்கான மிகவும் செலவு குறைந்த, நிலையான மாதிரியாக மக்கள் வருமான முன்முயற்சியை நான் ஆதரிக்கிறேன்.

பில்லியன் கணக்கில் செலவாகும் என்றும் ஆனால் பங்கேற்பாளர்களுக்கு சிறிய வருமான ஆதாயங்களை மட்டுமே வழங்கியதாகவும் அவர் கூறிய கடந்த கால திட்டங்களுக்கு மாறாக, 

வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை வழங்க வெண்டிங் விற்பனை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய திட்டத்தை அவர் கூறினார்.

இது விற்பனை இயந்திரங்களைப் பற்றியது அல்ல. 

மக்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்குவதற்காக ஒரு அரசாங்கத் திட்டம். மக்களின் பணத்தை எவ்வாறு அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் மறைமுகமான அர்த்தம்.

ஒரு திட்டத்தை உருவாக்கி உதவிகளை விநியோகிப்பது மட்டும் போதாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset