நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆணும் பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது

யான்:

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று யான் மாவட்ட போலிஸ் தலைவர் முஹம்மத் ஹமிசி அப்துல்லாஹ் கூறினார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இங்குள்ள தாமான் நோனாவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து தனது தரப்பினருக்கு இரவு 9.40 மணிக்கு தகவல் கிடைத்தது.

அதற்கு முன்பே கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

30 வயது ஆணும் 28 வயது பெண்ணும் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்தப் பெண் ஒரு வீட்டின் முன் புரோட்டான் வீரா காரில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் அந்த நபர் வீட்டுத் தோட்டத்தில் சாலையில் உடலில் பல கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset