நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோத்தா கினபாலு:

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் கனமழையை தொடர்ந்து சபாவின் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 110 குடும்பங்களைச் சேர்ந்த 409 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு 54 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.

பெனாம்பாங்கில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பியூஃபோர்ட்டில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset