நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மணிஷா பிரித் கொலை வழக்கு: ஷாஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது

ஷாஆலம்:

மாணவி மணிஷா பிரித் கொலை வழக்கு ஷாஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பல்கலைக்கழக மாணவி மணிஷா பிரித் கொலை வழக்கில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் மீதான வழக்கு சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

எம். ஸ்ரீ தர்வின், விடி தினேஸ்வரி ஆகியோர் எதிர்கொள்ளும் வழக்கை மாற்றுமாறு துணை அரசு வழக்கறிஞர் ராஜா ஜைசுல் ஃபரிதா ராஜா ஜஹாருதின்  மனுவை தாக்கல் செய்தார்.

அம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கைரத்துல் அனிமா ஜெலானி இந்த முடிவை எடுத்தார்.

முன்னதாக கடந்த ஜூன் 23 அன்று இரவு 9.11 மணி முதல் 11.31 மணி வரை சைபர்ஜெயாவில் உள்ள ஒரு காண்டோமினியத்தில் மணிஷா பிரித் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset