நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர்:

இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள் என ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 

இளைய தலைமுறையினரின் குரல்களைக்  ஆசியான் தலைவர்கள் கேட்க வேண்டும்.

வட்டார கூட்டமைப்பு பெண்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துக்களைக் கூற ஒரு தளத்தை வழங்குகிறது.

ஆனால் அனைத்து நாடுகளும் அத்தகைய வாய்ப்புகளை வழங்குவதில்லை.

ஒவ்வொரு ஆசியான் தலைமைத்துவக் கூட்டத்திலும், நாம் அமர்ந்து நமது இளைஞர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும்.

தலைவர்களாகிய நாம் அமைதியாக இருந்து இளைய தலைமுறை சொல்வதைக் கேட்க வேண்டும்.

46ஆவது ஆசியான் இன்டர் பார்லிமென்டரி அசெம்பிளி (ஐபிஏ)வை தலைமை தாங்கி உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset