நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு

ஜோகூர் பாரு:

ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு அறிமுகம் செய்யப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை முதல் (22 செப்டம்பர்) வெளிநாட்டினர் விரைவுத் தகவல் குறியீட்டை (QR code) பயன்படுத்தி ஜோகூர் சுங்கச் சோதனைச் சாவடியைக் கடக்கலாம்.

சிங்கப்பூரர்களும் பிற நாட்டவரும் கடப்பிதழைக் காண்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.

மலேசிய உள்துறை அமைச்சு அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையின் முன்னோடித் திட்டமாக இது நடப்புக்கு வரும் என்று அமைச்சு தெரிவித்தது.

அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாத இறுதி வரை அது நீடிக்கும்.

வெளிநாட்டினர் MyNIISe என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் கடப்பிதழையும் மற்ற முக்கிய ஆவணங்களையும் எடுத்து வருவது அவசியம் என்று உள்துறை அமைச்சு அறிவுறுத்தியது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset