நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு

ஷாஆலம்:

அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின்  தாயாருக்கு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக கேடட்டின் தாயார், பாதுகாப்பு அமைச்சர் முகமது காலித் நோர்டினுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.

இது சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் மரணம் தொடர்பான விசாரணையில் அவரும் அவரது அமைச்சும் எந்த அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தடுக்கிறது.

சம்சுலின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நரன் சிங் இதனை கூறினார்.

இன்று காலை வழக்கு நிர்வாகத்தின் போது ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி அட்லின் அப்துல் மஜித் இந்த உத்தரவை பிறப்பித்தது.

செப்டம்பர் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிரதிவாதிக்கு (காலித்) எதிரான தடை உத்தரவுக்கான எங்கள் விண்ணப்பம் தொடர்பானது இன்றைய வழக்கு நிர்வாகம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset