நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்

கிள்ளான்:

கம்போங் சுங்கை பாரு பிரச்சினையில் மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இதனை வலியுறுத்தினார்.

கோலாலம்பூரின் கம்போங் சுங்கைபாருவில் நில மறுசீரமைப்பு மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து கவனமாகவும் விவேகமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கம்போங் பாரு பகுதி காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டால் எந்தத் தடையும் இல்லை.

ஆனால் அனைத்து நிலைமைகளும் தெளிவாகவும் மலாய்க்காரர்களுக்கு சாதகமாகவும் இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும்.

கம்போங் பாருவின் ஸ்தாபனம் மற்றும் பாரம்பரியத்தின் அசல் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் இன்று சிலாங்கூர் அரச அலுவலக முகநூலில் பகிரப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset