நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்

கோத்தா கினபாலு:

காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கெனிங்காவ்- அபின், சுங்கை நுண்டுனானில் வெள்ளத்தில் சபா மின்சாரத் துறை ஊழியர் ஒருவர் காணாமல் போனார்.

இந்நிலையில் இன்று மாலை 6.18 மணிக்கு கெனிங்காவ், சுங்கை கம்போங் லியாவ் லாட் பகுதியில் 35 வயதுடைய நபரின் உடலை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சபா தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் முகமட் பிசார் அஜீஸ் தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டவரை மீட்க உதவினார்கள்.

மேலும் நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset