நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 3,000க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்

கோத்தா கினபாலு:

சபா வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட 3,000க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தது.

தொடர் கனமழையால் சபாவில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது.

இன்று காலை தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 916 குடும்பங்களைச் சேர்ந்த 3,134 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை இந்த எண்ணிக்கை 814 குடும்பங்களைச் சேர்ந்த 2,919 பேராக இருந்தது.

பாதிக்கப்பட்ட அனைவரும் பியூஃபோர்ட், மெம்பகுட், பெனாம்பாங், பாப்பர், புட்டாடன் மற்றும் சிபிடாங் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய 27வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset