நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்

செமாரான்:

செமரானில் முதலை தாக்கியதில்12 வயது சிறுவன் மரணமடைந்தான்.

மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று காலை செமரானில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் முதலையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான்

இந்தச் சம்பவம் காலை 7.30 மணியளவில் சுங்கை கம்போங் எம்பிலாவில் தனியாக ஒரு படகில் இருந்தபோது,   

பாதிக்கப்பட்ட ஆரிஃப் ஃபஹ்மி ஐமான் முதலையால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காலை 7.53 மணிக்கு தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்தது.

உடனே எட்டு பேர் கொண்ட தீணைப்புக் குழுவை அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு ஆடவரின்  சாட்சியின் ஆரம்பத் தகவல் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர் அந்த நேரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சாட்சியின் படகிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு படகில் இருந்து வலை வீசிக் கொண்டிருந்தார்.

பின் பாதிக்கப்பட்டவரின் அலறல் சத்தம் கேட்ட அந்த நபர், அந்தக் குரலை நோக்கித் திரும்பியபோது,   பாதிக்கப்பட்டவர் பார்வையில் இருந்து மறைந்துவிட்டதைக் கண்டார்  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

உடனே தேடலை நடத்திய தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்டவரின் உடலை அவர் கடைசியாகப் பார்த்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் கண்டுபிடித்தனர்.

முதல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் உடலிலும் மார்பிலும் முதலை கடித்ததால் ஏற்பட்ட காயத்தின் அறிகுறிகள் காணப்பட்டன என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset