நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை டத்தோஸ்ரீ அன்வார், டத்தோஸ்ரீ ஹம்சா ஆதரித்துள்ளனர்.

கோலாலம்பூரில் உள்ள கம்போங் சுங்கை பாரு நிலத்தின் மறுசீரமைப்பில் மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார்.

சிலாங்கூர் சுல்தானின் இந்த நிலைப்பாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினுன் ஆகியோர் உடன்பட்டுள்ளனர்.

வரலாற்று பாரம்பரியத்தைப் பாராட்டி சமச்சீர், நியாயமான வளர்ச்சியைத் திட்டமிடும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப விவரிக்கப்பட்ட இந்த ஆணையை தனது கட்சி வரவேற்பதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

ஒவ்வொரு முடிவும் மக்களின் நல்வாழ்வையும் சமூகத்தின் அடையாளத்தின் உயிர்வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே சுல்தான் ஷராபுடினின் அறிக்கை, குறிப்பாக மலாய்க்காரர்களின் உயிர்வாழ்வு மற்றும் கண்ணியத்தின் பின்னணியில், மக்களின் கவலைகள் மற்றும் மனசாட்சியின் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது என்று டத்தோஸ்ரீ ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset