நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினா மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இடத்தில்  பொம்மையை கொண்டு அவர் விழுவதை முழுமையாக சித்தரிக்கப்பட்டது

கோத்தா கினபாலு:

ஷாரா கைரினா மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இடத்தில் பொம்மையை கொண்டு அவர் விழுவதை முழுமையாக சித்தரிக்கப்பட்டது.

மறைந்த ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள், 

இன்று  துன் முஸ்தபா இடைநிலைப் பள்ளியில் இறந்தவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இடத்தில் நடைபெற்றன.

சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹாசன், மறைந்த ஜாராவின் மரணம் தொடர்பான சம்பவம் தொடர்பான உண்மையான நிலவரத்தை பெறுவதற்காக, செயல்பாட்டு அதிகாரிகள் உட்பட அனைவரும் உடனிருந்தார்.

இறந்தவர் கட்டிடத்தின் கீழ் மயக்க நிலையில் காணப்பட்ட இடத்திலிருந்து கைவிடப்பட்ட ஒரு பொம்மையை பயன்படுத்தி அவர் விழுவதை முழுமையாக சித்தரிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த நாளில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை உன்னிப்பாக மதிப்பிடுவதற்காக, 

விடுதி கட்டிடத்தின் தாழ்வாரத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பியின் மீது ஏறுவதும் இந்த உருவகப்படுத்துதலில் அடங்கும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset