நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு கட்டிடத்தை வெளியேற்றும் நடவடிக்கை  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

கோலாலம்பூர்:

தலைநகர் கம்போங் சுங்கை பாரு கட்டிடத்தை வெளியேற்றும் நடவடிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்போங் சுங்கை பாருவில் இன்று கட்டிடங்களை காலி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது  ​​நிலைமையைக் கட்டுப்படுத்தும் போது டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சுசில்மி அஃபெண்டி சுலைமான் காயமடைந்தார்.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று போலிசார் கோரினர். அதற்கு குடியிருக்காப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கட்டிடத்தை காலி செய்யும் நடவடிக்கை சிறிது நேரம் தடைபட்டது.

மேலும் அப்பகுதியில் வீட்டின் கட்டமைப்பை இடிக்கும் பணியை மேற்கொள்ள நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒற்றுமையின் அடையாளமாக நேற்று இரவு முதல் பல குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset