நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்களுக்குச் சொந்தமில்லாத ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உணவு வளாகங்களில் சோதனை: ஜெகன்

ஜார்ஜ்டவுன்:

தங்களுக்குச் சொந்தமில்லாத ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உணவு வளாகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பினாங்கு உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குனர் எஸ். ஜெகன் இதனை உறுதிப்படுத்தினார்.

பாயன் லெபாஸில் உள்ள ஒரு பேரங்காடி உணவு வளாகத்தில் உள்ள ஒரு கடையில் தங்களுக்குச் சொந்தமானதல்லாத ஹலால் சான்றிதழைப் பயன்படுத்துவதாகக் கூறும் வீடியோ வைரலானது.

இதைத் தொடர்ந்து அமைச்சின் அதிகாரிகள் அந்த கடையை சோதனை செய்தது.

மாநில அமலாக்க அதிகாரிகள், பினாங்கு இஸ்லாமிய சமய விவகாரத் துறையின்  அமலாக்க அதிகாரிகளுடன் சேர்ந்து சோதனை செய்யப்பட்டது.

இதில்  மியான்மர் தொழிலாளர்களுடன் அந்த உணவகம் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

மேலும் ஆய்வின் முடிவில்  இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (ஜாக்கிம்) ஹலால் லோகோ வணிக வளாகத்தில் ஒட்டப்படவில்லை.

அதே வேளையில் தயாரிக்கப்பட்ட உணவு ஹலால் என்றும் முஸ்லிம்களால் உண்ணக்கூடியது என்றும் யாரையும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ கூடிய எந்தவொரு பிரதிநிதித்துவமோ அல்லது செயலோ இல்லை என்பதைக் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset