நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் உணர்வு, ஆளுமை ஆகியவற்றை ஆதரிக்கும்போது பலவீனமான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்: ரபிஸி

கோலாலம்பூர்:

மக்கள் உணர்வு, ஆளுமை ஆகியவற்றை  ஆதரிக்கும் போது  பலவீனமான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ரபிஸி ரம்லி இதனை கூறினார்.

தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் ஆளுமை, உணர்வு ஆகிய காரணங்களை நம்பியுள்ளனர்.

இதன  காரணமாக நாடு பயனற்ற தலைமையால் ஆளப்படுகிறது.

அரசியல் தலைவர்கள், பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பிற அமைச்சர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் மக்கள்தான் ஊதியம் தருகின்றனர்.

நாட்டின் பிரச்சினைகளை ஆளவும் அதை தீர்க்கவும் தான் இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.

நமது கலாச்சாரம் ஒரு வேட்பாளர் தலைவரை உணர்வு, ஆளுமையின் அடிப்படையில் தீர்மானிக்கிறது.

மாறாக ஆளுமை, பிரச்சினைகளை தீர்க்கும் திறன், அறிவை அடிப்படையாகக் கொண்டு அல்ல.

நமது சமூகத்தின் தீமைகளுக்கு இதுவே காரணம்.

அதாவது பிரதமர் வேட்பாளர்கள் பலர் இருந்தாலும் பிரச்சினையைத் தீர்க்க சில சூத்திரங்கள் மட்டுமே உள்ளன.

இந்தச் சுழற்சி தொடரும். பிரச்சினை நீடிக்கும்.

உண்மையில் சுமையைச் சுமப்பவர்கள் ஊதியம் பெறாத அரசியல் அயோக்கியர்கள் என்று அவர் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset