நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் வழக்கில் 43.9 மில்லியன் ரிங்கிட் மோசடி தொடர்பான 273 குற்றச்சாட்டுகள் ஐந்து மணி நேரம் வாசிக்கப்பட்டது

ஷாஆலம்:

குளோபல் இக்வான் வழக்கில் 43.9 மில்லியன் ரிங்கிட் மோசடி தொடர்பான 273 குற்றச்சாட்டுகள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாசிக்கப்பட்டது.

குளோபல் இக்வான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது மூன்று முன்னாள் கணக்காளர்கள் மீது 43.9 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது  தொடர்பான 273 குற்றச்சாட்டுகளை நேற்று மாலை நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஐந்து மணி நேரம் வாசித்தார்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்மூத் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி நசிரூடின் முஹம்மது அலி, அவரது மூன்று முன்னாள் கணக்காளர்கள் ஹமிமா யாகூப், முஹம்மது குஷைரி ஒஸ்மா, அவரது மனைவி அஸ்மத் @ அஸ்மானிரா முஹம்மது ரம்லி  ஆகியோர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

இதில் நசிரூடின் மீது மொத்தம் 14 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 109 குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஹமிமா (69 குற்றச்சாட்டுகள் - 4.6 மில்லியன் ரிங்கிட்), முஹம்மது குசைரி (54 குற்றச்சாட்டுகள் - 20.3 மில்லியன் ரிங்கிட்), அஸ்மானிரா (41 குற்றச்சாட்டுகள் - 5 மில்லியன் ரிங்கிட்) குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset