நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலந்தில் வான்வெளி ஊடுருவலைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்ய மலேசியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

வார்சாவ்:

போலந்தில் வான்வெளி ஊடுருவலைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்ய அங்குள்ள மலேசியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலந்து வான்வெளியில் சமீபத்தில் பல ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளது.

இதைத் தொடர்ந்து போட்லாஸ்கி, மசோவிக்கி,  லுபெல்ஸ்கி பகுதிகளில் வசிக்கும் அனைத்து மலேசியர்களையும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும்.

உண்மையான செய்தி ஆதாரங்கள் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெறவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களுக்கு தகவலறிந்தவர்களாக இருங்கள். உண்மையான உள்ளூர் செய்தி ஆதாரங்களைக் கண்காணிக்கவும்.

உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருங்கள் என வார்சாவில் உள்ள மலேசியத் தூதரகம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset